84 பௌத்த சித்தர்கள் -2
திபெத்திய பாரம்பரியப்படி எண்பத்து நான்கு பௌத்த சித்தர்கள்: திபெத்திய பாரம்பரியத்தில் 84-சித்தர்களின் பெயர்கள் (சதுரசிதிஸ்சித்தர்), “சதுரசிதி-சித்த-பிரவுருத்தி” என்ற நூலில் காணப்படுகிறது, விளக்கம் இவ்வாறுள்ளன. அபயதத்தர் (சுமார். 1100 CE) என்பவர் இந்த விவரங்களைக் கொடுத்துள்ளார்[5]. இந்த ஓலைசுவடிப் புத்தகத்தில் அழகான சித்தர்களின் வண்ணப்படங்களும் உள்ளன[6].
இங்கு “ப” என்பதனை “பாத” என்று வாசிக்க வேண்டும். அஜிந்தபாதன்,
அஜோகிபாதன், சம்பகபாதன், சௌரங்கிபாதன் என்று பெயர்கள் வரும்,
அவற்றிலிருந்து அப்பெயர்களின் பொருளை அறிந்து கொள்ளலாம்.
எண் | பெயர் | பொருள் | விளக்கம் |
1 | அசிந்த / அசிந்தப | பேராசைக் கொண்ட துறவி | விறகுவெட்டி, விறகு வியாபாரம் |
2 | அஜோகி /அயோஜிப | ஒதுக்கப்பட்ட பிரயோகமில்லாதவன் | பிணமாக நடித்தவன் |
3 | அனங்கப/அனங்க/அனங்கவஜ்ர | அழகான முட்டாள் | சுந்தரானந்தர் / குதம்பைச் சித்தர்? |
4 | ஆர்யதேவ/ஒருகண்ணையுடைவர் | நாகார்ஜுனரின் சீடர் | மஹாசித்தர்களில் ஒருவர் |
5 | பபஹ | சுற்றித் திரியும் காதலன் | |
6 | பத்ரப | ஜம்பப் பேர்வழி | தனியான பிராமணன் |
7 | பண்டேப | பொறாமைப்படும் கடவுள் | |
8 | பிக்ஷனப | இரண்டு பற்கள் கொண்ட சித்தன் | |
9 | புஸுகு/புஸுகுபாத | சோம்பேரி சந்நியாசி | ஜடம்-ஒருவேலையும் செய்யாதவன் |
10 | சமரிப | தெய்வீக சக்கிலியன் | |
11 | சம்பக/சம்பகபாத | மலர்களுக்கு அரசன் | |
12 | சர்பரிப/சர்பதி | மக்களைக் கல்லாக்கியவன் | கல்லாக்குபவன்; கல்லுளி சித்தர்? |
13 | சத்ரப | ராசியுள்ள பிச்சைக்காரன் | அதிருஷ்டம் உள்ளவன் |
14 | சௌரங்கிப | அங்கஹீனன் | கை-கால்கள் இல்லாதவன் |
15 | சேலுகப | மறுபடியும் வீர்யம் பெற்றக் கொக்கு | கொங்கணவன் |
16 | தரிகப | கோவில் விபச்சாரியின் அடிமை அரசன் | |
17 | தேன்கிப | பிராமண அடிமை | |
18 | தௌலிப | முற்கள் கொண்ட கயிறு திரிப்பவன் | |
19 | தர்மப | என்றைக்கும் மாணவன் | |
20 | திலீப | சந்தோஷமான வியாபாரி | சுகவான்; தேரையர்? |
21 | தோபின | அறிவுள்ள வண்ணான் | |
22 | தோகரிப | பாத்திரங்களை சுமப்பவன் | |
23 | தோம்பி ஹெருக | புலி சவாரி செய்பவன் | புலிப்பாணி? |
24 | துக்காண்டி | பெருக்குபவன், சுத்தம் செய்பவன் | |
25 | கண்டப | பிரமச்சரியத்தைக் கடைபிடிக்கும் துறவி | மணியடிக்கும் துறவி |
26 | கர்பரி/கர்பரிப | துக்கமளிக்கும் பண்டிதன் | |
27 | கோதுரிப/கோரூர | பறவைப் பிடிப்பவன் | |
28 | கோரக்ஷ / கோரக்கநாத | நிரந்தரமாக மாடு மேய்ப்பவன் | பசுக்களைக் காப்பவன் – இவர் கோரக்கரக்கவும் அல்லது திருமூலராகவும் கொள்ளலாம். |
29 | இந்திரபூதி | திலோபனின் குரு | எந்திரியங்களை வென்றவன் |
30 | ஜலதார | தகிணி என்பவரின் சேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் | நீரைப்போன்று வேகமாமக செல்லக்கூடியவன்/ ஓடுபவன் |
31 | ஜெயந்தர | காக்கையின் ஆசிரியர் | காகபுசசுண்டர்? |
32 | ஜோகிப | சித்தப் பிரயாணி | அலைந்து-திரிந்து கொண்டிருப்பவன் |
33 | கலப | அழகான பைத்தியம் | சுந்தரானந்தர்?/ குதம்பைச் சித்தர்? |
34 | கம்பரிப | கொல்லன் | இரும்பு முதலிய உலோகவேலை செய்பவன் |
35 | கம்பள | கருப்புக் கம்பள யோகி | கருப்புக் கம்பளம் போர்த்தியவன்; சட்டைமுனி? |
36 | கணக்கல | முண்டமாமன இரு சகோதரிகளின் இளைய சகோதரன் | ஏழுதலையுள்ள சகோதரிகளின் இளைய சகோதரன் |
37 | கண்ஹ / கணப | கருப்புத் தோலன் | கருப்பு சித்தர் |
38 | கங்கண | சித்தராஜ | சித்தர்களுக்கு அரசன் |
39 | கங்கரிப | காதல் பித்தம் கொண்ட விதவை | |
40 | கந்தாலிப | குப்பைப் பொறுக்குபவன் | கந்தை தையல்காரன் |
41 | கபலப | கபாலம் கொண்டவன் | காபாலிகன் |
42 | கட்கப | திருட்டுராஜா | பயமில்லாதத்ன் திருடன் |
43 | கிலகிலப | தள்ளிவைக்கப்பட்ட லொடலொட வாயன் | வீண்பேச்சாளிடமரானந்தர் / பிண்ணாகீசர்? |
44 | கிரபலப | வென்று துக்கப்படுபவன் | |
45 | கோகிலப | நிம்மதியான ஓவியன் | கலைஞானி |
46 | கோடலிப | விவசாயியான குரு | |
47 | குசிப | கழுத்துவீங்கிய யோகி | |
48 | குக்கிரிப | நாய் விரும்பி | தத்தாரேயர்? |
49 | கும்பாரிப | பானையன் / பானை செய்வோன் | அகத்தியர்? |
50 | லக்ஷ்மீன்கர | பைத்தியமான இளவரசன் | |
51 | லிலப | ராஜீய சுகவாசி | என்றும் இன்பம் துய்ப்பவன் |
52 | லுசிகப | தப்பித்துக் கொள்பவன் | பொறுப்பற்றவன் |
53 | லுயிப | மீன்-குப்பையைத் தின்பவன் | மச்சேந்திரர் / மச்சமுனி? |
54 | மஜிப | மிகப்பெரியவன் | |
55 | மணிபத்ர | மாதிரி மனைவி | இவள்தான் மனைவி என்று போற்றப்படுபவள் |
56 | மெதினி | களைத்த விவசாயி | |
57 | மேகல | முண்டமான இரு சகோதரிகளில் மூத்தவள் | ஏழு சகோதரிகளில் மூத்தவள் |
58 | மெகோப | முழிக்கும் குரு | கண்ணிமைக்காத சித்தன் |
59 | மீனப | மீன் பிடிப்பவன் | மச்சேந்திரர் / மச்சமுனி? |
60 | நாகபோதி | சிவப்புக் கொம்புத் திருடன் | ஆரியதேவ / ஒற்றைக்கொம்பன் |
61 | நாகார்ஜுன | யோகி | |
62 | கலினப | சுதந்திர இளவரசன் | யார் மீதும் ஆதாரமாக இல்லாதவன் |
63 | நரோப | ||
64 | நிர்குணப | அறிவான முட்டாள் | |
65 | பச்சரிப | மாமிசம் சமைப்பவன் | புலத்தியர்? |
66 | பங்கஜப | தாமரையில் பிறந்த பிராமணன் | பிரம்மா, கமலமுனி? |
67 | புதலிப | மருந்து பாத்திரம் சுமப்பவன் | தன்வந்திரி? |
68 | ராஹுல | இளமைப் பெற்ற பழைய முட்டாள் | |
69 | சரஹ | அம்பு செய்பவன் | |
70 | சகர | கடலில் செல்பவன்? | டமரானந்தர்? |
71 | சமுதர | முத்தெடுப்பவன் | |
72 | சாந்திப | மிக்கப்படித்தவன்/அறிவுஜீவி | அமைதியான பிரச்சாரி |
73 | சர்வபக்ஷ | வெற்று வயிரன் | நன்றாக சாப்பிடுபவன் |
74 | சவரிப | வேட்டைக்காரன் | |
75 | சாலிப | நரி யோகி | |
76 | தந்தேப | சூதாடி | |
77 | தந்திப | முதுமைப் பெற்ற நெசவாளி | |
78 | தகநப | தேர்ந்தெடுத்தப் பொய்யன் | |
79 | திலோப | ||
80 | உடிலிப | பறக்கும் சித்தர் | பறவை-மனிதன்டமரானந்தர்? |
81 | உபான | செருப்புத் தைப்பவன் | |
82 | வினப | சங்கீதம் விரும்பி | பாட்டுப்பாடுபவன் |
83 | விருப | ||
84 | வியலப | அரசாங்க ரசவாதி | யூகிமுனி? |
Comments
Post a Comment