#2 மஹா சித்தர்கள்

இந்த பௌத்த சித்தர்களின் கதைகளைப் படித்தால், அவை அப்படியே நமது சித்தர்களின் கதைகளைப் போலவே இருக்கின்றன. நிச்சயமாக இக்கதைகளைப் படித்தறிந்தவர்கள், அவற்றை தமிழகத்திற்கு ஏற்றவாறு, சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்கேற்றாவாறு மாற்றியிருக்கிறார்கள். பௌத்த-திபெத்திய பாரம்பரியங்களில் 16ம் நூற்றாண்டு ஆவணத்தில் அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பௌத்த மஹாசித்தர்கள்: ஹடயோகப்ரதீபிகா[7] என்ற 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் 32 மஹாசித்தர்களின் பெயர்களைக் கொடுக்கிறது[8].
  1. ஆதிநாத
  2. மச்சேந்திர
  3. சாவர
  4. ஆனந்தபைரவ
  5. சௌரங்கி
  6. மீனநாத
  7. கோரக்கநாத
  8. விருபாக்ஷ
  1. பிலேசயா
  2. மந்தான
  3. பைரவ
  4. சித்திபுத்த
  5. கந்தடி
  6. கோராம்தக
  7. சுரானந்த
  8. சித்தபாத
  1. சர்பதி
  2. கானேரி
  3. பூஜ்யபாத
  4. நித்யானந்த
  5. நிரஞ்சன
  6. கபாலி
  7. பிந்துநாத
  8. காகசண்டீஸ்வர
  1. அல்லாம
  2. பிரபுதேவ
  3. கோட
  4. சோலி
  5. திமிந்தி
  6. பானுகி
  7. நாரதேவ
  8. கண்டகாபாலிக
அதாவது 84 சித்தர்களில் இந்த 32 சித்தர்கள் அவ்வாறு “மஹா சித்தர்க்ள்” என்று தேர்ந்தெடுத்துள்ளனர். ஒருவேளை நம்மாட்கள் இதனைப் பார்க்கவில்லையோ என்னமோ? ஒருவேளை, 14 பேர்களை விடுத்து, 18 பேர்களைத் தேர்ந்தெடுத்தனரோ என்னமோ? இல்லை ஜைனர்கள் எப்படி “மஹாசித்தர்கள்” என்று தீர்த்தர்ங்களையும் குறைத்துக் கொண்டார்களோ அவ்வாறிருக்கலாம். பௌத்தம் பொருத்த வரையில், தாந்திரீகத்தை பின்பற்றி சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள். பௌத்த சித்தர்கள் அனைவரும் தாந்தீர்கர்களே.
பௌத்த நூல்களைப் பின்பற்றி “திராவிட சித்தர்கள்” கதைகள் உருவானது: பொதுவாக ஜைன-பௌத்த நூல்கள் எல்லாமே சமஸ்கிருத நூல்களினின்று பெற்றப்பட்டவைதாம். ஜைனம் மற்றும் பௌத்தம் வேதங்களின் நிலைநிறுத்தப்பட்ட விஷயங்களை ஏற்றுக் கொண்டு, பெருமான்மையான மக்களின் நம்பிக்கைகளையும் தகவமைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட மதங்கள் தாம்[9]. பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு, கர்மா, பாவம், புண்ணியம், ஆன்மா / ஆத்மா முதலி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டன[10]. எப்படி வேதங்களப் படித்து, அதற்கு எதிராக சில தர்க்கநூல்களை உருவாக்கினார்களோ, அதேபோல இதிகாச-புராணங்களுக்கு மாறாகவும் தயாரித்தார்கள் என்று முன்னமே எடுத்துக் காட்டப்பட்டது. “கதா சரித் சாகர” போன்ற கதைகளில் சித்தர்கள் ஏதோ மந்திர-தந்திரங்களில் வல்லவர்கள் போன்று சித்தரிக்கப் பட்டனர். அதேபோல ஆரியர்களை உருவாக்கி, அவர்களுக்கு எதிராக திராவிடர்களை தயாரித்தவர்களே, ஜைன-சித்தர்கள், பௌத்த-சித்தர்கள் போல, திராவிட-சித்தர்களை உருவாக்கியிருக்கின்றனர். கொடுத்துள்ள பெயர்கள், விளக்கம் முதலியவற்றைப் படிக்கும்போதே, தெரிவது என்னவென்றால், நிச்சயமாக இதைப்படித்து, 19-20ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் புதியதான “திராவிட சித்தர்களை” உருவாக்கியிருக்கிறார்கள் என்பதுதான். மேலும் யாரை சேர்ப்பது-விடுப்பது என்று குழம்பி, பட்டியலை உருவாக்கினதால், “பதினெண் சித்தர்” பட்டியலும் குழம்பிவிட்டது. அகத்தியர் பெயரில் உள்ள நூல்களைப் படித்து, இவற்றையும் படித்தால், எப்படி இக்கதைகளைக் காப்பியடித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
ஆங்கிலேயர் ஆதரவுடன் அல்லது உத்தரவுடன் தமிழ் பண்டிதர்கள் உருவாக்கியுள்ளனர்: ஆங்கிலேயர் மற்றும் ஐரோப்பிய மிஷனரிகள் சேர்ந்து வேலை செய்து வந்துள்ளதால், ராபர்டோ டி நொபிலி, சீசன்பால்கு, பெஸ்கி போன்றவர்கள், தமிழ் பண்டிதர்களின் உதவியுடன், அத்தகைய சித்தர் பாடல்களை உருவாக்கியிருக்கலாம். சீசன்பால்கு கணபதி உபாத்யாயாவை மிரட்டி தமிழ் கற்றுக் கொண்டான், நூல்களையும் எழுதவைத்தான் மற்றும் அவரது சாவதற்கும் காரணமாக இருந்தான். ராபர்டோ டி நொபிலி “ஆத்தும நிர்ணயம்”, “புனர் ஜென்ம ஆக்ஷேபம்”, “அக்கியாண நிவாரணம்”, திவ்விய மாதிரிகை, ஞான சஞ்சீவி, அண்ட பிண்ட வியாக்கியானம், உலக பிராமண சாஸ்திரம், பரமசுமாக்ஷபிபிராயம் போன்ற நூல்களை எப்படி தமிழ் பண்டிதர்களை விலைக்கு வாங்கி எழுத வைத்தார்களோ அதேபோலத்தான் எழுதப்பட்டன[11]. ஐரோப்பியர்கள் ஓலைச்சுவடி புத்தகங்கள் எல்லாவற்றையும் சேகரித்து எடுத்துச் சென்றிருப்பதால், மேலும் பலவற்றிற்கு மூலப்பிரதிகளை எடுத்து, காகித நகல்களை வைத்துச் சென்றுள்ளதால், நிச்சயமாக அவர்கள் இந்த வேலையை செய்திருக்க வேண்டும்.  உலக மகாயுத்தங்களுக்குப் பிறகு, ஐரோப்பிய ஆட்சியாளர்கள் தத்தமது காலனிய நாடுகளினின்று வெளியேற வேண்டும் என்று தெரிந்தபோது, அங்கங்கு இத்தகைய போலி ஆவணங்களை, கட்டுக்கதைகளை, புரட்டு சரித்திரங்களை உற்பத்தி செய்து வைத்துவிட்டனர். மேலும் 19ம் நூற்றாண்டில் இந்திய மருத்துவமுறைகளுக்கு எதிராக ஆங்கிலேயர் அதிக அளவில் அடக்குமுறைகளைமேற்கொண்டு வந்தனர். உள்ள மருத்துவமுறைகளை “நாட்டு மருந்துவம்” (Native medicine), “காட்டு மருந்துவம்” (Tribal medicine), “கிராம மருந்துவம்” (village / folk medicine), “அநாகரிக மருத்துவம்” (Uncivilized / crude medicinal practices), “பில்லி-சூன்ய மருத்துவம்” (Shamanism / Witchcraft), “போலி மருத்துவம்” (Pseudo-medicine), “பேய்-பிசாசுகளை ஓட்டும் முறை” (Exorcism) என்றெல்லாம், பழித்துப்பேசி, இகழ்வாக எழுதி, எதிர்த்துச் சட்டங்களை இயற்றித் தடையும் செய்தனர்.
© வேதபிரகாஷ்

15-09-2012

Comments

Popular posts from this blog

145 சித்தர்கள்

பலப்ப்பல 18 சித்தர்கள்